கூட்டம் கூட்டிக்
கேலி செய்கிறாய்
குற்றம் காண்கிறாய் எப்போதும்
முழுசாகவே என்னைப்
புதைத்துவிடத்தான் பார்க்கிறாய்
இருந்தும் உன்னை
எதிர்க்காது விடுகிறேன்
பொறுத்துப் போகிறேன்
தவிர்த்துவிடுகிறேன் மோதலை
தலைகுனிந்தவாறு
அங்கிருந்து அகன்றுவிடுகிறேன்
படிக்காமலேயே கிடைத்துவிடுகிறது
பலவீனன் என்கிற பட்டம்
**
yes ofcourse but you have nothing to lose really
LikeLike