விக்ரகம் செய்வதற்கேற்ற
உயர்ந்தவகைக் கல் அல்ல
வெறும் கருங்கல்தான் நான்
உட்கார முயற்சித்தால்
பின்புறம் குத்தக்கூடும்
எதற்கும் ஒத்துவராத
எசகு பிசகான பாறாங்கல்
கருப்பாய்ப் பறந்து செல்லும்
காகத்திற்கு ஒரு வேளை
பயன்படக்கூடும்
இளைப்பாற உட்கார்ந்து
எச்சத்தை இறக்கிவிட்டு
எழுந்து பறப்பதற்கு
**