என்ன சார் இப்படி ?
என்றார்
எப்படி?
எதிரே வந்திருக்கக்கூடாதென்கிறாரா
ஏதும் சரியாக உடுத்திக்கொள்ளாமல்
வெளியே வந்துவிட்டேனா ஒருவேளை
அப்படியெல்லாம் இல்லையே
சரியாகத்தானே இருப்பதாகத் தெரிகிறது
பின் ஏன் இந்த ’இப்படி’
புரியாமல் திரும்பிப் பார்க்கையில்
போய்விட்டிருந்தார் கொஞ்ச தூரம்
ஏன் இவர் இப்படி ?
**