இருப்பவனுக்கும் பசிக்கிறது
இல்லாதவனுக்கும் பசிக்கிறது
புசிக்கத்தான் எல்லோருக்கும் கிடைப்பதில்லை
பசி அனைவருக்கும் ஆறுவதில்லை
பரந்து விரிந்த இயற்கை
தன்னைத் திறந்தே வைத்திருக்கிறது
ஆறு, குளங்களென்றும்
அருமையாய்க் காய், கனியென்றும்
அனைத்தையும் பரப்பித்தான் வைத்திருக்கிறது
அப்படியெல்லாம் இருந்தும்
எல்லோருக்கும் புசிக்கக் கிடைப்பதில்லை
ஏன் என்று தெரியவில்லை
ஒட்டிய வயிறோடு
உலவுபவர் எண்ணிக்கை
ஒருநாளும் உலகினில் குறைவதில்லை
* *