என்றும் ஓயாத தொல்லை…

எது கிடைக்கவில்லையோ
அதுதான் அற்புதம்
அதுதான் வேண்டுமாம் இந்த மனசுக்கு

செய்வதற்கோ ஏதுமில்லை
சும்மா இருக்கவும் விட மாட்டேன்கிறது
என்னடா இது !
இதைக் கட்டிக் கொண்டு
இன்னும் எத்தனை நாள்தான் அழுவது

***

3 thoughts on “என்றும் ஓயாத தொல்லை…

  1. விஜய் சான், எனக்கு பாரதியின் கவிதை நினைவிற்கு வருகிறது…

    மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்
    ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
    அதுதடுத் துலவுவாய்…

    பொய்யாய் உழலும் மனமே
    இனி நீயாய் எதையும் நாடாதே
    உனது தலைவன் யானே காண் …

    — மஹாகவி சுப்பிரமணிய பாரதி

    அவர் இன்னும் மனதை பற்றி எழுதிக்கொண்டே போகிறார்…

    Like

    1. அன்பு முரளி,
      பாரதி ஒரு கவிஞன் எனவே தமிழுலகம் அறிந்துவைத்திருக்கிறது. அவனது வார்த்தைகளில் வெளிப்படுவது அவன் வாழ்வின் மூலம் கண்டடைந்த ஞானம். ஞானக்கீற்றே வார்த்தை வீச்சாக அவனிடமிருந்து நமக்கெல்லாம். அவனை ஒரு ஞானியாக உணர்ந்தே அவனது வரிகளை வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அப்போது வார்த்தைகளை மிஞ்சிய வெளிச்சம் தெரியவரும்.
      விஜய்

      Like

Leave a comment